• May 18 2025

நாட்டில் தொடரும் கோர விபத்துக்கள்; சிறுவனும் பெண்ணும் பலி

Chithra / May 18th 2025, 8:51 am
image


நாட்டில் நேற்று  இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதன்படி, ஹபரணை பொலிஸ் பிரிவின் குடரம்பாவெவ - கும்புக்வெவ வீதியில் குடரம்பாவெவ நெல் வயல்களுக்கு அருகில் நேற்று மாலை கெப் வண்டி ஒன்று வீதியில் நின்று கொண்டிருந்த சிறுவன் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. 

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன், ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் ஹபரணை, குடாரம்பாவெவ பகுதியைச் சேர்ந்த 8 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது. 

மேலும், நேற்று மாலை வாரியபொல-சிலாபம் வீதியில், வாரியபொல நகரில் குருநாகல் திசையிலிருந்து வாரியபொல பேருந்து நிலையம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, பாதசாரி கடவையைக் கடந்த பெண் ஒருவர் மீது மோதியது. 

விபத்தில் பலத்த காயமடைந்த பெண், வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் மஹாகெலிய வாரியபொல பகுதியைச் சேர்ந்த 66 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் தொடரும் கோர விபத்துக்கள்; சிறுவனும் பெண்ணும் பலி நாட்டில் நேற்று  இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, ஹபரணை பொலிஸ் பிரிவின் குடரம்பாவெவ - கும்புக்வெவ வீதியில் குடரம்பாவெவ நெல் வயல்களுக்கு அருகில் நேற்று மாலை கெப் வண்டி ஒன்று வீதியில் நின்று கொண்டிருந்த சிறுவன் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த சிறுவன், ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹபரணை, குடாரம்பாவெவ பகுதியைச் சேர்ந்த 8 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது. மேலும், நேற்று மாலை வாரியபொல-சிலாபம் வீதியில், வாரியபொல நகரில் குருநாகல் திசையிலிருந்து வாரியபொல பேருந்து நிலையம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, பாதசாரி கடவையைக் கடந்த பெண் ஒருவர் மீது மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த பெண், வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மஹாகெலிய வாரியபொல பகுதியைச் சேர்ந்த 66 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement