• Aug 29 2025

அத்துரலியே ரத்ன தேரருக்கு விளக்கமறியல் உத்தரவு!

Chithra / Aug 29th 2025, 1:56 pm
image

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்தை அடுத்து செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 18 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அதியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ‘அபே ஜன பல’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தைப் பெறுவதற்காக, கட்சியின் பொதுச் செயலாளரான வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, அவரது கையொப்பம் பலவந்தமாகப் பெறப்பட்டதாக அத்துரலியே ரத்தன தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துரலியே ரத்ன தேரருக்கு விளக்கமறியல் உத்தரவு  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்தை அடுத்து செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஆகஸ்ட் 18 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அதியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ‘அபே ஜன பல’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தைப் பெறுவதற்காக, கட்சியின் பொதுச் செயலாளரான வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, அவரது கையொப்பம் பலவந்தமாகப் பெறப்பட்டதாக அத்துரலியே ரத்தன தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement