• Apr 17 2026

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை! மதுபோதையில் வீட்டிற்கு வந்து உறங்கிய மற்றுமொருவர் மர்ம மரணம்

Chithra / Apr 6th 2026, 8:38 am
image

இரத்தினபுரி - பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேஅதுர பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 


இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர் வேஅதுர, பனாமுர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


குறித்த நபர் அதே பகுதியிலுள்ள மற்றுமொரு வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த இருவருடன் ஏற்பட்ட மோதலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர், பனாமுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.


கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


பனாமுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


இதேவேளை

காலி - வெலிவத்தை பகுதியில் வீடொன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.


உயிரிழந்தவர் வெலிவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


குறித்த நபர் கடந்த 04ஆம் திகதி இரவு மதுபோதையில், தலையில் காயத்துடன் வீட்டிற்கு வந்து உறங்கியுள்ளதாகவும், மறுநாள் காலை அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 


காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை மதுபோதையில் வீட்டிற்கு வந்து உறங்கிய மற்றுமொருவர் மர்ம மரணம் இரத்தினபுரி - பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேஅதுர பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் வேஅதுர, பனாமுர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த நபர் அதே பகுதியிலுள்ள மற்றுமொரு வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த இருவருடன் ஏற்பட்ட மோதலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர், பனாமுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பனாமுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளைகாலி - வெலிவத்தை பகுதியில் வீடொன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.உயிரிழந்தவர் வெலிவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த 04ஆம் திகதி இரவு மதுபோதையில், தலையில் காயத்துடன் வீட்டிற்கு வந்து உறங்கியுள்ளதாகவும், மறுநாள் காலை அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

Advertisement

Advertisement

Advertisement