• Apr 20 2026

பரமாகந்த லுனுவெவ சரணாலயத்தில் கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி ஒருவர் பலி!

Ziya / Apr 20th 2026, 2:44 pm
image

புத்தளம் - ஆனமடுவ பரமாகந்த லுனுவெவ சரணாலயத்தில் கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி ஒரு பிள்ளையின் தந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


இவ்வாறு உயிரிழந்தவர் பரமாகந்த முகவரியில் வசிக்கும் 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தினேஷ் என கூறப்படுகிறது.  


சம்பந்தப்பட்ட நபர் லுனுவெவவிற்கு சென்று மீன் பிடித்து விட்டு திரும்பும் போது, இரவில் ஏரி சரணாலயத்தின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த வேளை, அப்பகுதியில் வனவிலங்குகளை இலக்கு வைத்து கட்டியிருந்த கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி, அந்த இடத்திலேயே பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சரணாலயத்திற்குள் புதர் வழியாக குனிந்து சென்று கொண்டிருந்தபோது,கட்டுத்துவக்கு வெடித்துள்ளதாகவும், வயிற்றை ஊடுருவிச் சென்று துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரின் மனைவி அவரை விட்டு பிரிந்து வெளிநாடு சென்றுள்ளதாகவும், அதிகமாக இவர் மது அருந்துதல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆனமடுவ பொலிஸாரால் பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.  


எவ்வாறாயினும், வனவிலங்குகளை இலக்கு வைத்து கட்டுத்துவக்கு துப்பாக்கியை அமைத்திருந்த நபரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


ஆனமடுவ பொலிஸ் நிலையத்தின் பதில் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வன்னிஆரச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பரமாகந்த லுனுவெவ சரணாலயத்தில் கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி ஒருவர் பலி புத்தளம் - ஆனமடுவ பரமாகந்த லுனுவெவ சரணாலயத்தில் கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி ஒரு பிள்ளையின் தந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இவ்வாறு உயிரிழந்தவர் பரமாகந்த முகவரியில் வசிக்கும் 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தினேஷ் என கூறப்படுகிறது.  சம்பந்தப்பட்ட நபர் லுனுவெவவிற்கு சென்று மீன் பிடித்து விட்டு திரும்பும் போது, இரவில் ஏரி சரணாலயத்தின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த வேளை, அப்பகுதியில் வனவிலங்குகளை இலக்கு வைத்து கட்டியிருந்த கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி, அந்த இடத்திலேயே பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சரணாலயத்திற்குள் புதர் வழியாக குனிந்து சென்று கொண்டிருந்தபோது,கட்டுத்துவக்கு வெடித்துள்ளதாகவும், வயிற்றை ஊடுருவிச் சென்று துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரின் மனைவி அவரை விட்டு பிரிந்து வெளிநாடு சென்றுள்ளதாகவும், அதிகமாக இவர் மது அருந்துதல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆனமடுவ பொலிஸாரால் பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.  எவ்வாறாயினும், வனவிலங்குகளை இலக்கு வைத்து கட்டுத்துவக்கு துப்பாக்கியை அமைத்திருந்த நபரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடுவ பொலிஸ் நிலையத்தின் பதில் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வன்னிஆரச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement