• May 25 2026

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு - திருமலையில் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு

Thansita / Jun 1st 2025, 3:21 pm
image

பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உள்துறைமுக வீதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று (01.06.2025) காலை சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை  மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜீ.எம்.ஹேமந்தகுமார, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன்,பிரதேச செயலாளர் மதிவண்ணன், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள்  உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 


பங்கேற்பாளர்களால் 70 பைகளாக மொத்தம் 2,100 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.

இந்நிகழ்வு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.



சுற்றாடல் தினத்தை முன்னிட்டு - திருமலையில் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உள்துறைமுக வீதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று (01.06.2025) காலை சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் திருகோணமலை  மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜீ.எம்.ஹேமந்தகுமார, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன்,பிரதேச செயலாளர் மதிவண்ணன், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள்  உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களால் 70 பைகளாக மொத்தம் 2,100 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.இந்நிகழ்வு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

Advertisement