வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் ஆகியோருக்கிடையே விசேட சந்திப்பு ஒன்று இன்று (02) வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் இரு முஸ்லிம் பாடசாலைகளின் தேவைகள், கல்வி, மீள்குடியேற்றம், காணி, வீட்டுத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி தேவைகள் தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
மாநகரசபை உறுப்பினரின் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் தொடர்பான கோரிக்கைகளை கேட்டு அறிந்து கொண்ட ஆளுநர் அவர்கள் இவ் விடயங்களின் முக்கியத்துவத்தை தான் உணர்ந்து கொண்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய மத்திய மற்றும் மாகாண அரச திணைக்களங்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
வடக்குமாகாண ஆளுநர் - மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் விசேட சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் ஆகியோருக்கிடையே விசேட சந்திப்பு ஒன்று இன்று (02) வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இச் சந்திப்பில் யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் இரு முஸ்லிம் பாடசாலைகளின் தேவைகள், கல்வி, மீள்குடியேற்றம், காணி, வீட்டுத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி தேவைகள் தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.மாநகரசபை உறுப்பினரின் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் தொடர்பான கோரிக்கைகளை கேட்டு அறிந்து கொண்ட ஆளுநர் அவர்கள் இவ் விடயங்களின் முக்கியத்துவத்தை தான் உணர்ந்து கொண்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய மத்திய மற்றும் மாகாண அரச திணைக்களங்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.