• Aug 17 2026

இந்தோனேசியாவில் மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Chithra / Aug 17th 2026, 11:09 am
image


இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று (17) அதிகாலை மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.


அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


எனினும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.


இதேவேளை, இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் பதிவாகியிருந்தன.


இந்த அனர்த்தத்தில் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.


மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளையும் இந்தோனேசிய துறைமுக அதிகாரசபை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.


இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையைச் சீரமைத்து மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தோனேசியாவில் மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று (17) அதிகாலை மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.எனினும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.இதேவேளை, இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் பதிவாகியிருந்தன.இந்த அனர்த்தத்தில் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளையும் இந்தோனேசிய துறைமுக அதிகாரசபை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையைச் சீரமைத்து மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement