• Feb 03 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.சி.சி!

shanuja / Feb 2nd 2026, 3:07 pm
image

2026 டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் புறக்கணிக்கப்படலாம் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை  எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டமானது அதிக வர்த்தக மதிப்பு கொண்ட போட்டி என்பதால், அதனை தவிர்ப்பது பாதிப்பாக அமையுமென ஐ.சி.சி. கருதுகின்றது.


மேலும், இது நியாயமான போட்டி, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் சமத்துவம் என்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.


தனது நிலைப்பாடு தொடர்பில் பாகிஸ்தான் ஐ.சி.சி. க்கு இன்னும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றது.எனினும், முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


“தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டுமே பங்கேற்பது உலகக் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது.


ஐ.சி.சி போட்டிகள் விளையாட்டு நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சித் தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டவை.


2026 ஆண்கள் டி20 உலகக்கிண்ணத்தை வெற்றிகரமாக நடத்துவது ஐ.சி.சியின் முதன்மை இலக்காகும். அதற்கான பொறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் உண்டு.


அனைத்து தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், பி.ஐ.சி பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை ஆராய வேண்டும்.” என்று கூறியுள்ளது.


போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.சி.சி 2026 டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் புறக்கணிக்கப்படலாம் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை  எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டமானது அதிக வர்த்தக மதிப்பு கொண்ட போட்டி என்பதால், அதனை தவிர்ப்பது பாதிப்பாக அமையுமென ஐ.சி.சி. கருதுகின்றது.மேலும், இது நியாயமான போட்டி, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் சமத்துவம் என்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.தனது நிலைப்பாடு தொடர்பில் பாகிஸ்தான் ஐ.சி.சி. க்கு இன்னும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றது.எனினும், முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.“தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டுமே பங்கேற்பது உலகக் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது.ஐ.சி.சி போட்டிகள் விளையாட்டு நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சித் தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டவை.2026 ஆண்கள் டி20 உலகக்கிண்ணத்தை வெற்றிகரமாக நடத்துவது ஐ.சி.சியின் முதன்மை இலக்காகும். அதற்கான பொறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் உண்டு.அனைத்து தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், பி.ஐ.சி பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை ஆராய வேண்டும்.” என்று கூறியுள்ளது.போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement