• Apr 30 2026

நிந்தவூர் பிரதேச சபையின் பொது மக்களுக்கான அறிவித்தல்

dorin / Apr 29th 2026, 8:37 pm
image

நிந்தவூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்லது நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள சகல கட்டிடங்கள், வணிக நிலையங்கள், வீடுகள், மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பாக, பிரதேச சபையின் முறையான அனுமதியை பெற்ற பின்னரே பணிகளை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயமானதாகும் என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் என நிந்தவூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.

எமது நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக முறையான அனுமதியின்றி பல கட்டிடங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், அவை தொடர்பில் அயலவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் அனைவரும், மேலும் எதிர்காலத்தில் கட்டுமானம் அல்லது ஏதேனும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க இருப்போரும், நிந்தவூர் பிரதேச சபையின் சட்டரீதியான அனுமதிகளைப் பெற்ற பின்னரே பணிகளை முன்னெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 52ஆம் பிரிவு மற்றும் 1984ஆம் ஆண்டின் 44ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம் ஆகிய சட்டங்களின் பிரகாரம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மேலதிக தகவல்கள் மற்றும் அனுமதி நடைமுறைகள் தொடர்பாக அலுவலக நாட்களில் நிந்தவூர் பிரதேச சபையை நேரடியாக அணுகுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என செய்தி குறிப்பில் நிந்தவூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.


நிந்தவூர் பிரதேச சபையின் பொது மக்களுக்கான அறிவித்தல் நிந்தவூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்லது நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள சகல கட்டிடங்கள், வணிக நிலையங்கள், வீடுகள், மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பாக, பிரதேச சபையின் முறையான அனுமதியை பெற்ற பின்னரே பணிகளை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயமானதாகும் என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் என நிந்தவூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.எமது நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக முறையான அனுமதியின்றி பல கட்டிடங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், அவை தொடர்பில் அயலவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.எனவே, தற்போது கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் அனைவரும், மேலும் எதிர்காலத்தில் கட்டுமானம் அல்லது ஏதேனும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க இருப்போரும், நிந்தவூர் பிரதேச சபையின் சட்டரீதியான அனுமதிகளைப் பெற்ற பின்னரே பணிகளை முன்னெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 52ஆம் பிரிவு மற்றும் 1984ஆம் ஆண்டின் 44ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம் ஆகிய சட்டங்களின் பிரகாரம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.மேலதிக தகவல்கள் மற்றும் அனுமதி நடைமுறைகள் தொடர்பாக அலுவலக நாட்களில் நிந்தவூர் பிரதேச சபையை நேரடியாக அணுகுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என செய்தி குறிப்பில் நிந்தவூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement