• Aug 19 2025

கேம்ப்ரிட்ஜ் அகராதியில் இணைக்கப்பட்ட புதிய சொற்கள்!

shanuja / Aug 18th 2025, 3:50 pm
image

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும், சொற்றொடர்களையும் இணைத்துள்ளதாக  அதன் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த புதிய சொற்களில், Gen Z மற்றும் Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் சில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.


இதில் skibidi, delulu மற்றும் tradwife ஆகிய சொற்களும் உள்ளடங்குகின்றன. ஸ்கிபிடி (skibidi)” என்பது Skibidi Toilet என்ற YouTube தொடரின் மூலம் பிரபலமான வார்த்தையாகும்.


அகராதியில், “ஸ்கிபிடி” என்ற சொல்லுக்கு, “‘cool’ அல்லது ‘bad’ என பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படலாம், அல்லது சில நேரங்களில் எந்த அர்த்தமுமின்றி நகைச்சுவையாகப் பயன்படலாம்” என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


டெலுலு (delulu)” என்பது delusional என்ற சொல்லின் சுருக்கமாகும்.அத்துடன் டிரேட்வைஃப் (tradwife) என்பது  ரிக்டொக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலாகப்  பயன்படுத்தப்படும் சொல்லாகும்.


இது சமையல் வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிடும் திருமணமான பெண்ணை குறிக்கும்.


இந்த நிலையில் கேம்ப்ரிட்ஜ் அகராதியின் சொற்பொருள் திட்ட மேலாளர் கொலின் மெக் இன்டோஷ் (Colin McIntosh), பிரபல செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது ஸ்கிபிடி, டெலுலு மற்றும் டிரேட்வைஃப் போன்ற சொற்கள் அகராதியில் சேர்க்கப்படுவது மிகவும் அரிதானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேம்ப்ரிட்ஜ் அகராதியில் இணைக்கப்பட்ட புதிய சொற்கள் கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும், சொற்றொடர்களையும் இணைத்துள்ளதாக  அதன் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த புதிய சொற்களில், Gen Z மற்றும் Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் சில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.இதில் skibidi, delulu மற்றும் tradwife ஆகிய சொற்களும் உள்ளடங்குகின்றன. ஸ்கிபிடி (skibidi)” என்பது Skibidi Toilet என்ற YouTube தொடரின் மூலம் பிரபலமான வார்த்தையாகும்.அகராதியில், “ஸ்கிபிடி” என்ற சொல்லுக்கு, “‘cool’ அல்லது ‘bad’ என பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படலாம், அல்லது சில நேரங்களில் எந்த அர்த்தமுமின்றி நகைச்சுவையாகப் பயன்படலாம்” என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.டெலுலு (delulu)” என்பது delusional என்ற சொல்லின் சுருக்கமாகும்.அத்துடன் டிரேட்வைஃப் (tradwife) என்பது  ரிக்டொக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலாகப்  பயன்படுத்தப்படும் சொல்லாகும்.இது சமையல் வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிடும் திருமணமான பெண்ணை குறிக்கும்.இந்த நிலையில் கேம்ப்ரிட்ஜ் அகராதியின் சொற்பொருள் திட்ட மேலாளர் கொலின் மெக் இன்டோஷ் (Colin McIntosh), பிரபல செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது ஸ்கிபிடி, டெலுலு மற்றும் டிரேட்வைஃப் போன்ற சொற்கள் அகராதியில் சேர்க்கப்படுவது மிகவும் அரிதானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement