• May 24 2025

தேங்காய் விலையை கட்டுப்படுத்த சதோச மூலம் புதிய திட்டம்..!

Sharmi / May 23rd 2025, 1:52 pm
image

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு 555 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தேங்காய் விலையை கட்டுப்படுத்த சதோச மூலம் அடுத்த வாரம் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, பெருந்தோட்ட நிறுவனங்களின் சதோசாக்கள் மூலம் நுகர்வோருக்கு தேங்காய்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தேங்காய் விலையை கட்டுப்படுத்த சதோச மூலம் புதிய திட்டம். கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, கடந்த ஆண்டு 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு 555 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் தெரிவித்தார்.இதற்கிடையில், தேங்காய் விலையை கட்டுப்படுத்த சதோச மூலம் அடுத்த வாரம் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.அதன்படி, பெருந்தோட்ட நிறுவனங்களின் சதோசாக்கள் மூலம் நுகர்வோருக்கு தேங்காய்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement