• Apr 21 2026

கிரகரி வாவி சுற்றுலா படகு சேவையில் புதிய கட்டுப்பாடுகள் - சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்கள்

Chithra / Apr 20th 2026, 12:45 pm
image

நுவரெலியா கிரகரி வாவியின் சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார். 


நேற்று (19) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


விபத்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 


நுவரெலியா கிரகரி வாவியில் சுமார் 120 சுற்றுலா படகுகள் உள்ளன. நேற்று இடம்பெற்ற விபத்தையடுத்து, படகு உரிமையாளர்கள் மற்றும்  சாரதிகளை அழைத்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 


சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாயம் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


வேகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் ஒழுக்கமான முறையில் படகுச் சவாரிகளை முன்னெடுக்க வேண்டும் என தௌிவூட்டப்பட்டுள்ளது. 


நேற்று (19) பிற்பகல் 2:30 மணியளவில் இரு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, அதிவேகமாக வந்த மற்றொரு படகுடன் மோதியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கிரகரி வாவியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 


எவ்வாறாயினும், அங்கிருந்த ஏனைய படகு ஓட்டுநர்கள் உடனடியாகச் செயற்பட்டு, அந்த இரு சுற்றுலாப் பயணிகளையும் படகு ஓட்டுநரையும் எவ்வித பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 


சம்பவம் தொடர்பாக இரு படகு ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளன

கிரகரி வாவி சுற்றுலா படகு சேவையில் புதிய கட்டுப்பாடுகள் - சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்கள் நுவரெலியா கிரகரி வாவியின் சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார். நேற்று (19) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நுவரெலியா கிரகரி வாவியில் சுமார் 120 சுற்றுலா படகுகள் உள்ளன. நேற்று இடம்பெற்ற விபத்தையடுத்து, படகு உரிமையாளர்கள் மற்றும்  சாரதிகளை அழைத்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாயம் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் ஒழுக்கமான முறையில் படகுச் சவாரிகளை முன்னெடுக்க வேண்டும் என தௌிவூட்டப்பட்டுள்ளது. நேற்று (19) பிற்பகல் 2:30 மணியளவில் இரு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, அதிவேகமாக வந்த மற்றொரு படகுடன் மோதியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கிரகரி வாவியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எவ்வாறாயினும், அங்கிருந்த ஏனைய படகு ஓட்டுநர்கள் உடனடியாகச் செயற்பட்டு, அந்த இரு சுற்றுலாப் பயணிகளையும் படகு ஓட்டுநரையும் எவ்வித பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக இரு படகு ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளன

Advertisement

Advertisement

Advertisement