• Apr 23 2026

கிழக்கு மாகாண பாடசாலை அதிபர் நியமனத்தில் புதிய நடைமுறை!

shanu / Apr 22nd 2026, 9:45 am
image

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் ஏற்படும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப கோரல் மற்றும் தெரிவு செயல்முறையில் முக்கியமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே. குணநாதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்.


புதிய நடைமுறையின் படி, இதுவரை மாகாணக் கல்விப்பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விச் செயலாளர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளின் கீழ் இருந்த விண்ணப்ப கோரல் அதிகாரம், தற்போது அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பாடசாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப விரைவான மற்றும் செயற்பாட்டுத் திறன் மிக்க நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த புதிய முறையின் கீழ், 1AB, 1C, II மற்றும் III தரப் பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடங்களுக்கு உரிய விண்ணப்பங்கள் வலய மட்டத்தில் கோரப்பட்டு, நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். பின்னர், தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மூலம் மாகாண கல்விச் செயலாளரிடம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.


மாகாண நியமன அதிகாரியாக செயல்படும் மாகாண கல்விச் செயலாளர் இறுதி நியமனத்தை வழங்குவார். மேலும், 1AB மற்றும் 1C பாடசாலைகளுக்கு இலங்கை அதிபர் தரம் I, II தரப் பாடசாலைகளுக்கு தரம் II மற்றும் III தரப் பாடசாலைகளுக்கு தரம் III அதிபர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்பங்கள் மாகாண மட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் கோரப்பட வேண்டியதுடன், வெற்றிடம் உருவாகும் தினத்திற்குப் பூர்வமாக குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே விண்ணப்பங்கள் அழைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்டிற்கு இருமுறை மட்டுமே — ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் — விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செயல்முறைகள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, இதற்கு முன்பு மாகாண மட்டத்தில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து சுற்றுநிருபங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய நடைமுறைகள் குறித்து கருத்து தெரிவித்த கல்வி நிபுணத்துவ சேவை ஆர்வலரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம். முக்தார், “கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் நீக்கப்பட்டு, தெளிவான மற்றும் கட்டுப்பாடுடைய புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இது நியமன செயல்முறையில் வெளிப்படைத்தன்மையையும் நியாயத்தன்மையையும் உயர்த்தும் முக்கிய முன்னேற்றமாகும்” என தெரிவித்தார்.


மேலும், இந்த மாற்றம் வலய மட்டத்தில் பொறுப்புணர்வை அதிகரித்து, தகுதியானவர்களை சரியான நேரத்தில் தெரிவு செய்ய உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

கிழக்கு மாகாண பாடசாலை அதிபர் நியமனத்தில் புதிய நடைமுறை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் ஏற்படும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப கோரல் மற்றும் தெரிவு செயல்முறையில் முக்கியமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே. குணநாதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்.புதிய நடைமுறையின் படி, இதுவரை மாகாணக் கல்விப்பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விச் செயலாளர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளின் கீழ் இருந்த விண்ணப்ப கோரல் அதிகாரம், தற்போது அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பாடசாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப விரைவான மற்றும் செயற்பாட்டுத் திறன் மிக்க நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புதிய முறையின் கீழ், 1AB, 1C, II மற்றும் III தரப் பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடங்களுக்கு உரிய விண்ணப்பங்கள் வலய மட்டத்தில் கோரப்பட்டு, நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். பின்னர், தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மூலம் மாகாண கல்விச் செயலாளரிடம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.மாகாண நியமன அதிகாரியாக செயல்படும் மாகாண கல்விச் செயலாளர் இறுதி நியமனத்தை வழங்குவார். மேலும், 1AB மற்றும் 1C பாடசாலைகளுக்கு இலங்கை அதிபர் தரம் I, II தரப் பாடசாலைகளுக்கு தரம் II மற்றும் III தரப் பாடசாலைகளுக்கு தரம் III அதிபர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் மாகாண மட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் கோரப்பட வேண்டியதுடன், வெற்றிடம் உருவாகும் தினத்திற்குப் பூர்வமாக குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே விண்ணப்பங்கள் அழைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்டிற்கு இருமுறை மட்டுமே — ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் — விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செயல்முறைகள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, இதற்கு முன்பு மாகாண மட்டத்தில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து சுற்றுநிருபங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய நடைமுறைகள் குறித்து கருத்து தெரிவித்த கல்வி நிபுணத்துவ சேவை ஆர்வலரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம். முக்தார், “கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் நீக்கப்பட்டு, தெளிவான மற்றும் கட்டுப்பாடுடைய புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இது நியமன செயல்முறையில் வெளிப்படைத்தன்மையையும் நியாயத்தன்மையையும் உயர்த்தும் முக்கிய முன்னேற்றமாகும்” என தெரிவித்தார்.மேலும், இந்த மாற்றம் வலய மட்டத்தில் பொறுப்புணர்வை அதிகரித்து, தகுதியானவர்களை சரியான நேரத்தில் தெரிவு செய்ய உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

Advertisement

Advertisement

Advertisement