• May 28 2026

ஊழியர்களுக்கு புதிய வேதன உயர்வு: தொழிலாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி!

Chithra / Jan 20th 2026, 7:41 pm
image

 

இலங்கையின் தனியார் துறை ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச வேதனத்தை உயர்த்துவதற்குத் தொழிலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த புதிய வேதன உயர்வு 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி மாதந்த குறைந்தபட்ச வேதனம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாளாந்த குறைந்தபட்ச ஊதியம் 1,080 ரூபாவிலிருந்து 1,200 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த வேதன உயர்வு, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியத் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

அத்துடன் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே.வட்டலியத்த வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அனைத்து முதலாளிமார்களும் இந்த ஊதியத்தை வழங்குவதற்கு சட்ட ரீதியாகக் கடமைப்பட்டுள்ளனர். 

திருத்தப்பட்ட சட்டத்தின் பிரிவு 4 இன் படி, பாதீட்டு நிவாரண கொடுப்பனவுகளைத் தவிர, மார்ச் 31, 2025 வரை ஒரு தொழிலாளி பெற்ற வேறு எந்த கொடுப்பனவும் குறைந்தபட்ச வேதனத்தில் கணக்கிடப்படக் கூடாது. 

இந்த வேதன உயர்வின் மூலம், பணியாளர் நலன் நிதிகளுக்கான பங்களிப்புகள், முதலாளி பொறுப்பு நிதிகள், கூடுதல் நேரம், முன் கொடுப்பனவு, மகப்பேறு சலுகைகள் மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள் போன்ற அனைத்து சட்டப்பூர்வ கொடுப்பனவுகளும் அதற்கேற்ப கணக்கிடப்படுவதை உறுதி செய்வதற்கு முதலாளிகள் பொறுப்பாவார்கள். 

முதலாளிமார்கள் உரிய முறையில் இந்த வேதனத்தை வழங்கத் தவறினால், தொழிலாளர் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவ அமைப்பு ஊடாக அல்லது அருகிலுள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு எழுத்துமூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு புதிய வேதன உயர்வு: தொழிலாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி  இலங்கையின் தனியார் துறை ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச வேதனத்தை உயர்த்துவதற்குத் தொழிலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய வேதன உயர்வு 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதந்த குறைந்தபட்ச வேதனம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளாந்த குறைந்தபட்ச ஊதியம் 1,080 ரூபாவிலிருந்து 1,200 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வேதன உயர்வு, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியத் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்துடன் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே.வட்டலியத்த வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அனைத்து முதலாளிமார்களும் இந்த ஊதியத்தை வழங்குவதற்கு சட்ட ரீதியாகக் கடமைப்பட்டுள்ளனர். திருத்தப்பட்ட சட்டத்தின் பிரிவு 4 இன் படி, பாதீட்டு நிவாரண கொடுப்பனவுகளைத் தவிர, மார்ச் 31, 2025 வரை ஒரு தொழிலாளி பெற்ற வேறு எந்த கொடுப்பனவும் குறைந்தபட்ச வேதனத்தில் கணக்கிடப்படக் கூடாது. இந்த வேதன உயர்வின் மூலம், பணியாளர் நலன் நிதிகளுக்கான பங்களிப்புகள், முதலாளி பொறுப்பு நிதிகள், கூடுதல் நேரம், முன் கொடுப்பனவு, மகப்பேறு சலுகைகள் மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள் போன்ற அனைத்து சட்டப்பூர்வ கொடுப்பனவுகளும் அதற்கேற்ப கணக்கிடப்படுவதை உறுதி செய்வதற்கு முதலாளிகள் பொறுப்பாவார்கள். முதலாளிமார்கள் உரிய முறையில் இந்த வேதனத்தை வழங்கத் தவறினால், தொழிலாளர் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவ அமைப்பு ஊடாக அல்லது அருகிலுள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு எழுத்துமூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement