• Aug 28 2026

நீர்கொழும்பு சிறை மோதல்: 20 பேருக்கு நீதிமன்றத்தின் அறிவிப்பு

Chithra / Aug 28th 2026, 7:48 pm
image


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு 20 பேருக்கு அறிவிப்புகளை அனுப்ப நீர்கொழும்பு பிரதம நீதிபதி ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.


குறித்த சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு இன்று (28) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, நீர்கொழும்பு பிரதம சிறை அதிகாரி உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 20 பேரை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.


முந்தைய விசாரணையின்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சம்பவம் தொடர்பாக 70 சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது.


அவர்களில் சந்தேகநபர்கள் 1 முதல் 6 வரையிலானோர் இன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர். எனினும், உடல்நலக் காரணங்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான காரணங்களால் இருவர் இன்று ஆஜர்படுத்தப்படவில்லை.


அதேவேளை, சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக நான்கு சந்தேகநபர்களையும் நான்கு சாட்சிகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.


இதன்போது, நான்கு சாட்சிகளும் அடையாள அணிவகுப்பில் ஆஜராகி சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.


இன்று ஆஜர்படுத்தப்படாத இரு சந்தேகநபர்கள் தொடர்பான ஆவணங்களையும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.


மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 சிறை அதிகாரிகள் மற்றும் 22 கைதிகள் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

நீர்கொழும்பு சிறை மோதல்: 20 பேருக்கு நீதிமன்றத்தின் அறிவிப்பு நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு 20 பேருக்கு அறிவிப்புகளை அனுப்ப நீர்கொழும்பு பிரதம நீதிபதி ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.குறித்த சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு இன்று (28) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நீர்கொழும்பு பிரதம சிறை அதிகாரி உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 20 பேரை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.முந்தைய விசாரணையின்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சம்பவம் தொடர்பாக 70 சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது.அவர்களில் சந்தேகநபர்கள் 1 முதல் 6 வரையிலானோர் இன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர். எனினும், உடல்நலக் காரணங்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான காரணங்களால் இருவர் இன்று ஆஜர்படுத்தப்படவில்லை.அதேவேளை, சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக நான்கு சந்தேகநபர்களையும் நான்கு சாட்சிகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.இதன்போது, நான்கு சாட்சிகளும் அடையாள அணிவகுப்பில் ஆஜராகி சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.இன்று ஆஜர்படுத்தப்படாத இரு சந்தேகநபர்கள் தொடர்பான ஆவணங்களையும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 சிறை அதிகாரிகள் மற்றும் 22 கைதிகள் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement