• Jun 20 2026

நானுஓயா – பதுளை ரயில் இன்று மீண்டும் சேவையில் - மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!

shanu / Jun 20th 2026, 9:56 pm
image

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நானுஓயா – பதுளை ரயில் இன்று  மீண்டும் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. 


அம்பேவலை முதல் நானுஓயா வரையிலான சுமார் 15 கிலோமீற்றர் தூர ரயில் பாதையில் ஏற்பட்ட சேதங்கள் முழுமையாக சீரமைக்கப்படாத காரணத்தால் அந்தப் பகுதியிலான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டிருந்தது.


எனினும், அரசாங்கம், ரயில்வே அதிகாரிகள்  ஊழியர்கள் இணைந்து குறித்த பாதையில் ஏற்பட்ட சேதங்களை விரைவாகச் சீரமைக்கும் பணிகளை  விரைவாக நிறைவு செய்துள்ளனர். 


அதற்கமைய  இன்று காலை 9.00 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து பதுளை நோக்கி முதலாவது ரயில் உத்தியோகபூர்வமாக தனது பயணத்தை ஆரம்பித்தது.


இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, நுவரெலியா மாநகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும், பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியுடன் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர். 


புயலால் பாதிக்கப்பட்டிருந்த மலைநாட்டு ரயில் சேவை மீண்டும் பதுளை முதல் நானுஓயா வரை வழமைக்கு திரும்பி உள்ளமை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

நானுஓயா – பதுளை ரயில் இன்று மீண்டும் சேவையில் - மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நானுஓயா – பதுளை ரயில் இன்று  மீண்டும் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. அம்பேவலை முதல் நானுஓயா வரையிலான சுமார் 15 கிலோமீற்றர் தூர ரயில் பாதையில் ஏற்பட்ட சேதங்கள் முழுமையாக சீரமைக்கப்படாத காரணத்தால் அந்தப் பகுதியிலான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டிருந்தது.எனினும், அரசாங்கம், ரயில்வே அதிகாரிகள்  ஊழியர்கள் இணைந்து குறித்த பாதையில் ஏற்பட்ட சேதங்களை விரைவாகச் சீரமைக்கும் பணிகளை  விரைவாக நிறைவு செய்துள்ளனர். அதற்கமைய  இன்று காலை 9.00 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து பதுளை நோக்கி முதலாவது ரயில் உத்தியோகபூர்வமாக தனது பயணத்தை ஆரம்பித்தது.இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, நுவரெலியா மாநகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும், பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியுடன் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர். புயலால் பாதிக்கப்பட்டிருந்த மலைநாட்டு ரயில் சேவை மீண்டும் பதுளை முதல் நானுஓயா வரை வழமைக்கு திரும்பி உள்ளமை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement