• May 03 2025

விடைபெற்றார் நல்லை ஆதீன குருமுதல்வர்: தீயுடன் சங்கமமானது சுவாமிகளின் பூதவுடல்..!

Sharmi / May 2nd 2025, 9:52 pm
image

மறைந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்றையதினம் இரவு கொழும்பில் இறையடி சேர்ந்தார்.

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் இறையடி சேர்ந்தார்.

இந்நிலையில் குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.

புகழுடலுக்கு மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இன்று மாலை நல்லை ஆதீனத்தில் நடைபெற்று  குரு முதல்வரின் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.





விடைபெற்றார் நல்லை ஆதீன குருமுதல்வர்: தீயுடன் சங்கமமானது சுவாமிகளின் பூதவுடல். மறைந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானதுஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்றையதினம் இரவு கொழும்பில் இறையடி சேர்ந்தார்.கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் இறையடி சேர்ந்தார்.இந்நிலையில் குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.புகழுடலுக்கு மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.இந்த நிலையில் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இன்று மாலை நல்லை ஆதீனத்தில் நடைபெற்று  குரு முதல்வரின் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement