கிளிநொச்சி மாவட்டத்தில் கலைப்பிரிவில் முக்கொம்பன் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி விஜயரூபன் இசைப்பிரியா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நேற்று முன்தினம் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில்,
கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளார்.
மாணவி விஜயரூபன் இசைப்பிரியாவுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதன்போது கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய அதிபர் திரு.இராசரத்தினம் அரவிந்தன், பூநகரிப் பிரதேச சபையின் உப தவிசாளர் ( நல்லூர் வட்டாரம்) குலவீரசிங்கம் குணலட்சுமி ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் கலைப்பிரிவில் முக்கொம்பன் மகா வித்தியாலய மாணவி முதலிடம் கிளிநொச்சி மாவட்டத்தில் கலைப்பிரிவில் முக்கொம்பன் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி விஜயரூபன் இசைப்பிரியா முதலிடத்தைப் பிடித்துள்ளார். நேற்று முன்தினம் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளார். மாணவி விஜயரூபன் இசைப்பிரியாவுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இதன்போது கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய அதிபர் திரு.இராசரத்தினம் அரவிந்தன், பூநகரிப் பிரதேச சபையின் உப தவிசாளர் ( நல்லூர் வட்டாரம்) குலவீரசிங்கம் குணலட்சுமி ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.