• Nov 05 2026

மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி

Ziya / Nov 4th 2026, 5:19 pm
image

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் சுமார் 12 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து, அதன் தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 8.5 பில்லியன் அமெரிக்க டொலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 80,603 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.


இதன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு 88.8 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதுடன், போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் 22ஆவது இடத்தையும், ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தையும் மீண்டும் அவர் பிடித்துள்ளார்.


கடந்த ஜூன் மாதம் சீனாவின் பைட் டான்ஸ் நிறுவன இணை நிறுவனர் யின் மிங், அம்பானியை முந்தி ஆசியாவின் முதலிடத்தைப் பிடித்திருந்தார். தற்போது அம்பானி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.


ரிலையன்ஸ் நிறுவனம் 2.7 பில்லியன் டொலர் காலாண்டு வருவாயைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் உயர்ந்துள்ளன. 


இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 19 பில்லியன் டொலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், 84 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் யின் மிங் 25ஆவது இடத்திலும், 80.1 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி 26ஆவது இடத்திலும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் சுமார் 12 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து, அதன் தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 8.5 பில்லியன் அமெரிக்க டொலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 80,603 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.இதன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு 88.8 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதுடன், போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் 22ஆவது இடத்தையும், ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தையும் மீண்டும் அவர் பிடித்துள்ளார்.கடந்த ஜூன் மாதம் சீனாவின் பைட் டான்ஸ் நிறுவன இணை நிறுவனர் யின் மிங், அம்பானியை முந்தி ஆசியாவின் முதலிடத்தைப் பிடித்திருந்தார். தற்போது அம்பானி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.ரிலையன்ஸ் நிறுவனம் 2.7 பில்லியன் டொலர் காலாண்டு வருவாயைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் உயர்ந்துள்ளன. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 19 பில்லியன் டொலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், 84 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் யின் மிங் 25ஆவது இடத்திலும், 80.1 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி 26ஆவது இடத்திலும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement