• Jul 08 2026

கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் வினவிய - ரவிகரன் எம்.பி!

shanu / Jul 7th 2026, 9:53 pm
image

கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதன் முன்னேற்றம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதுதொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைகளை பரிசீலிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இதன்போது பதிலளித்துள்ளார்.


பாராளுமன்றக்குழு அறையில் (07)இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,


கடந்த 21ஆம் திகதி பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்தை அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.


அதற்கமைய கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் சாத்தியவள ஆய்வொன்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் மேற்கொள்ளுதல், சாத்தியவள ஆய்வை மேற்கொள்வதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.


அவ்வாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பற்றிய முன்னேற்றம் குறித்து 07.07.2026இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.


இந்நிலையில் எதிர்வரும் 25.07.2026அன்று முல்லைத்தீவிற்கு தாம் வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், சாத்தியவள ஆய்வறிக்கைகள் தொடர்பில் பரசீலித்து அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.


அந்தவகையில் எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதுதொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைகளை பரிசீலிக்கும் குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகிய தரப்பினரை இணைத்துக்கொள்ளுமாறு இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவரிடம் தெரிவித்தார்.


அத்தோடு குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலம் அமைப்பதுதொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைக்குரிய நிதியை தமது அமைச்சிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் வினவிய - ரவிகரன் எம்.பி கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதன் முன்னேற்றம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதுதொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைகளை பரிசீலிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இதன்போது பதிலளித்துள்ளார்.பாராளுமன்றக்குழு அறையில் (07)இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,கடந்த 21ஆம் திகதி பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்தை அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.அதற்கமைய கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் சாத்தியவள ஆய்வொன்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் மேற்கொள்ளுதல், சாத்தியவள ஆய்வை மேற்கொள்வதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.அவ்வாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பற்றிய முன்னேற்றம் குறித்து 07.07.2026இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.இந்நிலையில் எதிர்வரும் 25.07.2026அன்று முல்லைத்தீவிற்கு தாம் வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், சாத்தியவள ஆய்வறிக்கைகள் தொடர்பில் பரசீலித்து அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.அந்தவகையில் எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதுதொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைகளை பரிசீலிக்கும் குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகிய தரப்பினரை இணைத்துக்கொள்ளுமாறு இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவரிடம் தெரிவித்தார்.அத்தோடு குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலம் அமைப்பதுதொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைக்குரிய நிதியை தமது அமைச்சிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement