• Aug 30 2025

வயலுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; நபரொருவர் படுகாயம் - மூதூரில் சம்பவம்!

shanuja / Aug 29th 2025, 3:51 pm
image

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் வயலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். 


இந்த விபத்துச் சம்பவம் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் 1.30 மணியளவில் சம்பவித்துள்ளது. 


விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த அவரை  அவசர நோயாளர் காவு வண்டி மூலம் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 


அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் ( வயது -42) என தெரியவருகிறது.


விபத்து  தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வயலுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; நபரொருவர் படுகாயம் - மூதூரில் சம்பவம் வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் வயலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் 1.30 மணியளவில் சம்பவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த அவரை  அவசர நோயாளர் காவு வண்டி மூலம் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் ( வயது -42) என தெரியவருகிறது.விபத்து  தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement