பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மருமகனை மாமியார் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தியாவின் தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது.
மது பழக்கத்துக்கு அடிமையான குறித்த நபர், மது போதையில் வீட்டுக்கு வந்து உறக்கத்திலிருந்து 60 வயது மாமியாரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாமியார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த குறித்த நபர், மாமியாரிடம் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாமியார் அருகிலிருந்த கட்டையை எடுத்து, மருமகனான குறித்த நபரைத் தாக்கினார். தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தெலுங்கானா பொலிஸார் மாமியாரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மருமகனால் தொடர் பாலியல் வன்கொடுமை; கட்டையால் அடித்து கொன்ற மாமியார் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மருமகனை மாமியார் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தியாவின் தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது. மது பழக்கத்துக்கு அடிமையான குறித்த நபர், மது போதையில் வீட்டுக்கு வந்து உறக்கத்திலிருந்து 60 வயது மாமியாரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாமியார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த குறித்த நபர், மாமியாரிடம் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் அருகிலிருந்த கட்டையை எடுத்து, மருமகனான குறித்த நபரைத் தாக்கினார். தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கானா பொலிஸார் மாமியாரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.