• Aug 19 2025

10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கை துறைமுகங்களில் தடுத்து வைப்பு

Chithra / Aug 19th 2025, 12:18 pm
image

  

அனுமதிக்கான தாமதங்கள் மற்றும் ஆவண சிக்கல்கள் காரணமாக இலங்கை துறைமுகங்களில் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மிரிஞ்சிகே தெரிவித்துள்ளார். 

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். 

ஆகஸ்ட் 15க்கு முன்னரான 45 நாட்களுக்குள் 8,726 வாகனங்கள் துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 வாகனங்கள் இன்னும் கணக்கில் வராமல் இருப்பதாகவும் தெரிவித்தார். 

அதிகரித்து வரும் தாமதச் செலவுகள் இறுதியில் பொதுமக்களுக்குச் சுமையாக மாறும் என்றும் அவர் எச்சரித்தார்.

10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கை துறைமுகங்களில் தடுத்து வைப்பு   அனுமதிக்கான தாமதங்கள் மற்றும் ஆவண சிக்கல்கள் காரணமாக இலங்கை துறைமுகங்களில் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மிரிஞ்சிகே தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். ஆகஸ்ட் 15க்கு முன்னரான 45 நாட்களுக்குள் 8,726 வாகனங்கள் துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 வாகனங்கள் இன்னும் கணக்கில் வராமல் இருப்பதாகவும் தெரிவித்தார். அதிகரித்து வரும் தாமதச் செலவுகள் இறுதியில் பொதுமக்களுக்குச் சுமையாக மாறும் என்றும் அவர் எச்சரித்தார்.

Advertisement

Advertisement

Advertisement