• May 14 2026

மன். திருக்கேதீஸ்வர ஆலய பெருந்திருவிழாவின் கொடிச்சீலை வழங்கும் நிகழ்வு!

shanu / May 14th 2026, 4:38 pm
image

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.


இன்று காலை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து   உபயகாரர்களுக்கான பத்திரிகையும் காளாஞ்சி திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு   விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.


அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினை சேர்ந்த  திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் குடும்பத்தினரிடம் காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டு கையளிக்கப்பட்டு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் ஆலய பிரதம குருக்கள் மற்றும் ஆலய திருப்பணிச் சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர். 


திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும்  21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்  20ஆம் திகதி  பாரம்பரிய முறைப்படி யாழில் இருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


மன். திருக்கேதீஸ்வர ஆலய பெருந்திருவிழாவின் கொடிச்சீலை வழங்கும் நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.இன்று காலை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து   உபயகாரர்களுக்கான பத்திரிகையும் காளாஞ்சி திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு   விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினை சேர்ந்த  திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் குடும்பத்தினரிடம் காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டு கையளிக்கப்பட்டு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் ஆலய பிரதம குருக்கள் மற்றும் ஆலய திருப்பணிச் சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர். திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும்  21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்  20ஆம் திகதி  பாரம்பரிய முறைப்படி யாழில் இருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement