• May 05 2026

காணாமல்போன முச்சக்கர வண்டி சாரதி காயங்களுடன் மீட்பு; திருகோணமலை பொலிஸார் விசாரணை!

Chithra / Jan 27th 2026, 12:48 pm
image


​திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் முச்சக்கர வண்டித் தரிப்பிடத்திலிருந்து நேற்று முதல் காணாமல் போயிருந்த சாரதி, இன்று படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


​சம்பவம் குறித்து தெரியவருவதாவது,


திருகோணமலை வைத்தியசாலை முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் வாடகைக்கு அமர்த்தப்படும்  முச்சக்கர வண்டியின் சாரதியான ஜெயக்குமார் என்பவர் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயிருந்தார். இது குறித்து அவரது உறவினர்களால் தேடுதல் நடத்தப்பட்டு வந்தது.


​இந்நிலையில், இன்று காலை நொச்சிகுளம் பகுதியில் அவர் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 


அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதையடுத்து, உடனடியாக அவர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையில், குறித்த சாரதி ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டி முழுமையாக சிதைந்த நிலையில் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


இந்தச் சேதமானது சாரதி மீதான தாக்குதலின் போது ஏற்பட்டதா அல்லது வாகன விபத்தினால் ஏற்பட்டதா என்பதில் மர்மம் நீடிக்கிறது.


இந்தச் சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அடையாளம் தெரியாத கடத்தல் கும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்று தாக்கிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என ஒரு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


எனினும், இது ஒரு பாரிய வாகன விபத்தாக இருக்கலாம் என மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர்.


​இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


காணாமல்போன முச்சக்கர வண்டி சாரதி காயங்களுடன் மீட்பு; திருகோணமலை பொலிஸார் விசாரணை ​திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் முச்சக்கர வண்டித் தரிப்பிடத்திலிருந்து நேற்று முதல் காணாமல் போயிருந்த சாரதி, இன்று படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.​சம்பவம் குறித்து தெரியவருவதாவது,திருகோணமலை வைத்தியசாலை முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் வாடகைக்கு அமர்த்தப்படும்  முச்சக்கர வண்டியின் சாரதியான ஜெயக்குமார் என்பவர் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயிருந்தார். இது குறித்து அவரது உறவினர்களால் தேடுதல் நடத்தப்பட்டு வந்தது.​இந்நிலையில், இன்று காலை நொச்சிகுளம் பகுதியில் அவர் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதையடுத்து, உடனடியாக அவர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையில், குறித்த சாரதி ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டி முழுமையாக சிதைந்த நிலையில் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சேதமானது சாரதி மீதான தாக்குதலின் போது ஏற்பட்டதா அல்லது வாகன விபத்தினால் ஏற்பட்டதா என்பதில் மர்மம் நீடிக்கிறது.இந்தச் சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அடையாளம் தெரியாத கடத்தல் கும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்று தாக்கிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என ஒரு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.எனினும், இது ஒரு பாரிய வாகன விபத்தாக இருக்கலாம் என மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர்.​இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement