• Aug 03 2025

மட்டக்களப்பில் மினி சூறாவளி; தூக்கி வீசப்பட்ட கூரைகள் - வீடுகள் பலத்த சேதம்!

shanuja / Aug 1st 2025, 11:08 pm
image

மட்டக்களப்பில் திடீரென வீசிய மின சூறாவளியால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளன. 


மட்டக்களப்பு -வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இன்று வீசிய மினி சூறாவளி வீசியுள்ளது. 


திடீரென ஏற்பட்ட மினிசூறாவளி காரணமாக  கூரைகள் பறந்துள்ள நிலையில்  வீடுகள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன. 


மினி சூறாவளி ஆலயத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலயத்தின் வெளிப்புறம் இருந்த விக்கிரகங்கள் காற்றால் உடைந்து சிதறியுள்ளன. 


அத்துடன் ஆலயத்தை சூழவுள்ள மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. மேலும் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பில் மினி சூறாவளி; தூக்கி வீசப்பட்ட கூரைகள் - வீடுகள் பலத்த சேதம் மட்டக்களப்பில் திடீரென வீசிய மின சூறாவளியால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளன. மட்டக்களப்பு -வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இன்று வீசிய மினி சூறாவளி வீசியுள்ளது. திடீரென ஏற்பட்ட மினிசூறாவளி காரணமாக  கூரைகள் பறந்துள்ள நிலையில்  வீடுகள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன. மினி சூறாவளி ஆலயத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலயத்தின் வெளிப்புறம் இருந்த விக்கிரகங்கள் காற்றால் உடைந்து சிதறியுள்ளன. அத்துடன் ஆலயத்தை சூழவுள்ள மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. மேலும் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement