• Oct 02 2026

10 மாதங்களுக்குப் பின்னர் மலையகத்திற்கு வந்த மகிழ்ச்சி!

Chithra / Oct 2nd 2026, 2:06 pm
image


'டித்வா' (Cyclone Ditwah) சூறாவளியின் பேரழிவு காரணமாகக் கடுமையான சேதங்களைச் சந்தித்து, கடந்த 10 மாதங்களாக முடங்கிக்கிடந்த மலையக ரயில் பாதை போக்குவரத்து இன்று (02) முதல் மீண்டும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.


போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த காலத்தில் வீசிய 'டித்வா' சூறாவளி மலையக ரயில் பாதையின் பல பகுதிகளில் பாரிய நிலச்சரிவுகளையும் உட்கட்டமைப்புச் சேதங்களையும் ஏற்படுத்தியிருந்தது. 


இதனால் கொழும்புடனான மலையகப் பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.


தற்போது சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக கொழும்பில் இருந்து பேராதனை ஊடாக கம்பளை வரையிலான தற்காலிக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அமுலாக்க அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், கொழும்புக்கும் மலையகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 


இது மலையகப் பகுதி பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாதையின் ஏனைய பகுதிகளின் சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்ததும், பதுளை வரையிலான முழுமையான ரயில் சேவைகளும் விரைவில் கட்டம் கட்டமாக மீளமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தநிலையில் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, பயணிகள் பாடல்களைப் பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


இதன்போது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் பயணிகளுடன் இணைந்து பாடல் பாடி, ரயில் பயணத்தில் கலந்து கொண்டார்.

10 மாதங்களுக்குப் பின்னர் மலையகத்திற்கு வந்த மகிழ்ச்சி 'டித்வா' (Cyclone Ditwah) சூறாவளியின் பேரழிவு காரணமாகக் கடுமையான சேதங்களைச் சந்தித்து, கடந்த 10 மாதங்களாக முடங்கிக்கிடந்த மலையக ரயில் பாதை போக்குவரத்து இன்று (02) முதல் மீண்டும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த காலத்தில் வீசிய 'டித்வா' சூறாவளி மலையக ரயில் பாதையின் பல பகுதிகளில் பாரிய நிலச்சரிவுகளையும் உட்கட்டமைப்புச் சேதங்களையும் ஏற்படுத்தியிருந்தது. இதனால் கொழும்புடனான மலையகப் பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.தற்போது சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக கொழும்பில் இருந்து பேராதனை ஊடாக கம்பளை வரையிலான தற்காலிக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அமுலாக்க அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், கொழும்புக்கும் மலையகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது மலையகப் பகுதி பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாதையின் ஏனைய பகுதிகளின் சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்ததும், பதுளை வரையிலான முழுமையான ரயில் சேவைகளும் விரைவில் கட்டம் கட்டமாக மீளமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தநிலையில் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, பயணிகள் பாடல்களைப் பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.இதன்போது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் பயணிகளுடன் இணைந்து பாடல் பாடி, ரயில் பயணத்தில் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement