• Oct 03 2026

இலங்கைக்கு எதிராக அமெரிக்கத் தடையா? ஈரானிய கப்பல்களால் புதிய நெருக்கடி

Chithra / Oct 2nd 2026, 8:43 pm
image


இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில வாரங்களாக அமெரிக்க அதிகாரிகள் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் 20 வெற்று ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சீனாவுக்கு ஈரானிய கச்சா எண்ணெயை விநியோகித்த பின்னர் திரும்பிய இந்தக் கப்பல்கள், இலங்கை மற்றும் மலேசிய கடற்பரப்புகளுக்கு அருகில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


கப்பல்களில் உள்ள மாலுமிகள் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக ஈரானியக் கப்பல்களுக்கு இலங்கை சேவைகளை வழங்கியிருந்த நிலையில், மலேசியாவுக்கு அருகில் இருந்த சில கப்பல்கள் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.


இந்நிலையில், ஈரானியக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு எதிராக ‘இரண்டாம் நிலைத் தடைகள்’ (Secondary Sanctions) விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த ஆகஸ்ட் மாதம் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக, கொழும்பு துறைமுக எல்லையை வந்தடைந்த ஈரானியக் கொடியுடன் கூடிய இரண்டு கப்பல்களுக்கு சேவைகளை வழங்குவது ‘சாமர்த்தியமான செயலல்ல’ என இலங்கை துறைமுக அதிகாரசபையும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், அமெரிக்காவின் தடைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 40 பேரை உள்ளடக்கிய குழுவொன்றுக்கு அமெரிக்கத் தூதரகம் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று நாட்கள் பயிற்சிப் பட்டறையொன்றை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, கப்பல்களில் உள்ள மாலுமிகளிடமிருந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக உருக்கமான கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக இலங்கை கப்பல் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும், அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி குறித்த கப்பல்களுக்கு எந்தவிதமான சேவைகளையும் வழங்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இவ்வாறான நிலையில், மனிதாபிமான அடிப்படையில் ஈரானியக் கப்பல்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவது தொடர்பிலும், அதனால் ஏற்படக்கூடிய அமெரிக்கத் தடைகளின் தாக்கம் தொடர்பிலும் இலங்கை அதிகாரிகள் சிக்கலான நிலையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கத் தடையா ஈரானிய கப்பல்களால் புதிய நெருக்கடி இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக அமெரிக்க அதிகாரிகள் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் 20 வெற்று ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவுக்கு ஈரானிய கச்சா எண்ணெயை விநியோகித்த பின்னர் திரும்பிய இந்தக் கப்பல்கள், இலங்கை மற்றும் மலேசிய கடற்பரப்புகளுக்கு அருகில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.கப்பல்களில் உள்ள மாலுமிகள் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக ஈரானியக் கப்பல்களுக்கு இலங்கை சேவைகளை வழங்கியிருந்த நிலையில், மலேசியாவுக்கு அருகில் இருந்த சில கப்பல்கள் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.இந்நிலையில், ஈரானியக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு எதிராக ‘இரண்டாம் நிலைத் தடைகள்’ (Secondary Sanctions) விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த ஆகஸ்ட் மாதம் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, கொழும்பு துறைமுக எல்லையை வந்தடைந்த ஈரானியக் கொடியுடன் கூடிய இரண்டு கப்பல்களுக்கு சேவைகளை வழங்குவது ‘சாமர்த்தியமான செயலல்ல’ என இலங்கை துறைமுக அதிகாரசபையும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், அமெரிக்காவின் தடைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 40 பேரை உள்ளடக்கிய குழுவொன்றுக்கு அமெரிக்கத் தூதரகம் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று நாட்கள் பயிற்சிப் பட்டறையொன்றை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, கப்பல்களில் உள்ள மாலுமிகளிடமிருந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக உருக்கமான கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக இலங்கை கப்பல் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும், அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி குறித்த கப்பல்களுக்கு எந்தவிதமான சேவைகளையும் வழங்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இவ்வாறான நிலையில், மனிதாபிமான அடிப்படையில் ஈரானியக் கப்பல்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவது தொடர்பிலும், அதனால் ஏற்படக்கூடிய அமெரிக்கத் தடைகளின் தாக்கம் தொடர்பிலும் இலங்கை அதிகாரிகள் சிக்கலான நிலையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement