நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதியில் உலப்பனை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவால், அங்கு இருந்த மரப்பலகை கடை, சில வீடுகள் மற்றும் ரயில் பாதை ஆகியன மண்சரிவால் சரிந்து விழுந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.
சம்பவத்தையடுத்து, நாவலப்பிட்டி – கம்பளை பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
மண்சரிவில் காயமடைந்த ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிலர் குடியிருப்புகளிலிருந்து காணாமல் போயுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் இருப்பதால், அந்தப் பகுதியை நோக்கி பொதுமக்கள் செல்லத் தவிர்க்குமாறு நாவலபிட்டிய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், நாவலபிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு அபாயங்களுக்கிடையில் சுமார் முப்பது குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலப்பனை பகுதியில் பாரிய மண்சரிவு - பிரதான போக்குவரத்து பாதிப்பு நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதியில் உலப்பனை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவால், அங்கு இருந்த மரப்பலகை கடை, சில வீடுகள் மற்றும் ரயில் பாதை ஆகியன மண்சரிவால் சரிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.சம்பவத்தையடுத்து, நாவலப்பிட்டி – கம்பளை பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.மண்சரிவில் காயமடைந்த ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிலர் குடியிருப்புகளிலிருந்து காணாமல் போயுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் இருப்பதால், அந்தப் பகுதியை நோக்கி பொதுமக்கள் செல்லத் தவிர்க்குமாறு நாவலபிட்டிய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கிடையில், நாவலபிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு அபாயங்களுக்கிடையில் சுமார் முப்பது குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.