• Mar 11 2026

வெள்ளத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை மீட்கச் சென்ற தந்தை ; அப்பா போகாதீங்க - கதறிய மகள்!

shanu / Nov 27th 2025, 6:29 pm
image

வெள்ளத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளை மீட்க தந்தை சென்றதையடுத்து அப்பா அப்பா போகாதீங்க என்று மகள் கதறித்துடித்த காட்சி மனதை உருக வைத்துள்ளது. 


இந்தச் சம்பவம் இந்தியாவின் தருமபுரி மாவட்டத்திலுள்ள காட்டாற்றில்  இடம்பெற்றுள்ளது. 


கனத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில் காட்டாற்று வழியே மோட்டார்சைக்கிளில் தந்தை, மகள் உட்பட மூவர் பயணித்துள்ளனர். 


அப்போது மழையின் வேகம் அதிகரித்ததுடன் காற்றும் வேகமாக வீசத் தொடங்கியது. அதன்போது மோட்டார்சைக்கிளைச் செலுத்த முடியாமல் அவர்கள் திணறினர். 


பின்னர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி உருட்டிச் செல்லும் வேளையில் மோட்டார்சைக்கிள் அவரின் கையை மீறி காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 


அதன்போது எப்படியேனும் மோட்டார்சைக்கிளை மீட்க வேண்டும் என எண்ணி தந்தை மெல்ல மெல்ல மோட்டார்சைக்கிள் அருகே சென்றுள்ளார். 


அப்போது வெள்ளம் அலைமோதிக்கொண்டிருந்ததைப் பார்த்து பயந்த மகள், அப்பா அதற்குள் சிக்கியிடுவாரோ என மனமுடைந்து “அப்பா... அப்பா போகாதீங்க , சீக்கிரம் வாங்க” என்று கதறியழுதார். பின்னர் ஒருவழியாக அவர் மோட்டார்சைக்கிளை மீட்டு திரும்பினார். 


தந்தை வெள்ளத்தில் சிக்கியிடுவாரோ என்ற பயத்தில் மகள் கதறித்துடித்த காணொளி தற்போது வைரலாகி மனதை உருக வைத்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை மீட்கச் சென்ற தந்தை ; அப்பா போகாதீங்க - கதறிய மகள் வெள்ளத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளை மீட்க தந்தை சென்றதையடுத்து அப்பா அப்பா போகாதீங்க என்று மகள் கதறித்துடித்த காட்சி மனதை உருக வைத்துள்ளது. இந்தச் சம்பவம் இந்தியாவின் தருமபுரி மாவட்டத்திலுள்ள காட்டாற்றில்  இடம்பெற்றுள்ளது. கனத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில் காட்டாற்று வழியே மோட்டார்சைக்கிளில் தந்தை, மகள் உட்பட மூவர் பயணித்துள்ளனர். அப்போது மழையின் வேகம் அதிகரித்ததுடன் காற்றும் வேகமாக வீசத் தொடங்கியது. அதன்போது மோட்டார்சைக்கிளைச் செலுத்த முடியாமல் அவர்கள் திணறினர். பின்னர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி உருட்டிச் செல்லும் வேளையில் மோட்டார்சைக்கிள் அவரின் கையை மீறி காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்போது எப்படியேனும் மோட்டார்சைக்கிளை மீட்க வேண்டும் என எண்ணி தந்தை மெல்ல மெல்ல மோட்டார்சைக்கிள் அருகே சென்றுள்ளார். அப்போது வெள்ளம் அலைமோதிக்கொண்டிருந்ததைப் பார்த்து பயந்த மகள், அப்பா அதற்குள் சிக்கியிடுவாரோ என மனமுடைந்து “அப்பா. அப்பா போகாதீங்க , சீக்கிரம் வாங்க” என்று கதறியழுதார். பின்னர் ஒருவழியாக அவர் மோட்டார்சைக்கிளை மீட்டு திரும்பினார். தந்தை வெள்ளத்தில் சிக்கியிடுவாரோ என்ற பயத்தில் மகள் கதறித்துடித்த காணொளி தற்போது வைரலாகி மனதை உருக வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement