• May 05 2026

சீனாவில் பயங்கர வெடிவிபத்து- 21 பேர்பலி! 61 பேர் காயம்!

Ziya / May 5th 2026, 10:23 am
image

மத்திய சீனாவின் ஹுனான் (Hunan) மாகாணத்தில் உள்ள ஒரு பெரிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து அந்நாட்டையே உலுக்கியுள்ளது. 


திங்கள்கிழமை மாலை நிகழ்ந்த இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 61 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


சாங்ஷா (Changsha) நகரின் லியுயாங் (Liuyang) பகுதியில் அமைந்துள்ள 'ஹுவாஷெங் பட்டாசு உற்பத்தி மற்றும் காட்சிப்படுத்துதல்' (Huasheng Fireworks Manufacturing and Display Company) நிறுவனத்தின் தொழிற்சாலையில் திங்கள்கிழமை மாலை 4:40 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த வெடிப்பின் தாக்கம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டுள்ளது.


விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகை இன்னும் வெளியேறி வரும் நிலையில், மீட்புப் பணிகள்  நடைபெறுகின்றன


ஐந்து வெவ்வேறு குழுக்களாக 480-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.


சீனாவில் பயங்கர வெடிவிபத்து- 21 பேர்பலி 61 பேர் காயம் மத்திய சீனாவின் ஹுனான் (Hunan) மாகாணத்தில் உள்ள ஒரு பெரிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து அந்நாட்டையே உலுக்கியுள்ளது. திங்கள்கிழமை மாலை நிகழ்ந்த இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 61 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.சாங்ஷா (Changsha) நகரின் லியுயாங் (Liuyang) பகுதியில் அமைந்துள்ள 'ஹுவாஷெங் பட்டாசு உற்பத்தி மற்றும் காட்சிப்படுத்துதல்' (Huasheng Fireworks Manufacturing and Display Company) நிறுவனத்தின் தொழிற்சாலையில் திங்கள்கிழமை மாலை 4:40 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த வெடிப்பின் தாக்கம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டுள்ளது.விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகை இன்னும் வெளியேறி வரும் நிலையில், மீட்புப் பணிகள்  நடைபெறுகின்றனஐந்து வெவ்வேறு குழுக்களாக 480-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement