• May 09 2025

யாழில் தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்து கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி பலி

Chithra / May 8th 2025, 1:53 pm
image


யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி ஆணொருவர் இன்றையதினம்  உயிரிழந்துள்ளார். 

இதன்போது ஏழாலை கிழக்கு, ஏழாலை என்ற முகவரியை சேர்ந்த 39 வயதுடைய குணரட்னம் குமரன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் இன்றையதினம் தனது தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்துகொண்டிருந்தார். 

இதன்போது மின்னல் அவர் மீது தாக்கியது.

இந்நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யாழில் தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்து கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி பலி யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி ஆணொருவர் இன்றையதினம்  உயிரிழந்துள்ளார். இதன்போது ஏழாலை கிழக்கு, ஏழாலை என்ற முகவரியை சேர்ந்த 39 வயதுடைய குணரட்னம் குமரன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் இன்றையதினம் தனது தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்துகொண்டிருந்தார். இதன்போது மின்னல் அவர் மீது தாக்கியது.இந்நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

Advertisement