• May 03 2025

மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு

Chithra / May 3rd 2025, 11:00 am
image


கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தோட்ட வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வொன்றை இன்று (03) சனிக்கிழமை காலை 06.00 மணி முதல் மேற்கொள்ளப்பட்டது. 

ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தோட்டப் பராமரிப்புக் குழுத் தலைவரும் உதவிச் செயலாளருமான எஸார் மீராசாஹிபின் ஒருங்கிணைப்பில்,

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் டாக்டர் எம்.எச்.சனூஸ் காரியப்பர் தலைமையில்  இச்சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

பிரதேச பொது அமைப்புகள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.


மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தோட்ட வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வொன்றை இன்று (03) சனிக்கிழமை காலை 06.00 மணி முதல் மேற்கொள்ளப்பட்டது. ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தோட்டப் பராமரிப்புக் குழுத் தலைவரும் உதவிச் செயலாளருமான எஸார் மீராசாஹிபின் ஒருங்கிணைப்பில்,சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் டாக்டர் எம்.எச்.சனூஸ் காரியப்பர் தலைமையில்  இச்சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.பிரதேச பொது அமைப்புகள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement