• Aug 10 2025

புனரமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு வழங்குக; மட்டு. மாநகர சபை முதல்வருக்கு சிறையிலிருந்து பிள்ளையான் கடிதம்!

shanuja / Aug 8th 2025, 9:22 pm
image

புனர்நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தைத் திறந்து, மக்கள் பாவனைக்கு விடுமாறு கோரி சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக, கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டுத் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி பிள்ளையான் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியு்ளளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனையடுத்து குறித்த கடிதம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தெரிவிக்கையில், 


பிள்ளையானால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும், கடிதம் அவருடைய கட்சி உறுப்பினரால் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் அது அவரால் அனுப்பப்பட்ட கடிதமா என்பதை ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.


மேலும் இந்த கடிதம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரும் அவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக  மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

புனரமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு வழங்குக; மட்டு. மாநகர சபை முதல்வருக்கு சிறையிலிருந்து பிள்ளையான் கடிதம் புனர்நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தைத் திறந்து, மக்கள் பாவனைக்கு விடுமாறு கோரி சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக, கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டுத் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி பிள்ளையான் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியு்ளளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த கடிதம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தெரிவிக்கையில், பிள்ளையானால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும், கடிதம் அவருடைய கட்சி உறுப்பினரால் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் அது அவரால் அனுப்பப்பட்ட கடிதமா என்பதை ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.மேலும் இந்த கடிதம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரும் அவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக  மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement