• Apr 19 2026

யாழில் முக்கிய கூட்டம்: மாவட்ட செயலகம் முன் குவிக்கப்பட்ட படையினர்!

Chithra / Mar 27th 2026, 10:19 am
image

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் இணை தலைமையுடன், நடைபெற்று வருகிறது.


அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், 

காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும் மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட செயலக சுற்றுவட்ட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


யாழில் முக்கிய கூட்டம்: மாவட்ட செயலகம் முன் குவிக்கப்பட்ட படையினர் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் இணை தலைமையுடன், நடைபெற்று வருகிறது.அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும் மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட செயலக சுற்றுவட்ட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement