• May 22 2025

மைத்திரி - ரணில் விசேட சந்திப்பு: பேச்சுவார்த்தை வெற்றி

Chithra / May 21st 2025, 12:36 pm
image

 

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சிக்குப் பெரும்பான்மையுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இது தொடர்பில் சமன் ரத்னப்பிரிய கருத்து தெரிவித்தார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்த போதிலும், பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வெற்றி பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கூட உறுப்பினர்களின் பெயர்கள் வழங்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.


மைத்திரி - ரணில் விசேட சந்திப்பு: பேச்சுவார்த்தை வெற்றி  முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சிக்குப் பெரும்பான்மையுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இது தொடர்பில் சமன் ரத்னப்பிரிய கருத்து தெரிவித்தார்.இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்த போதிலும், பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வெற்றி பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கூட உறுப்பினர்களின் பெயர்கள் வழங்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement