• Oct 14 2026

நடுவீதியில் தீப்பிழம்பாக மாறிய சொகுசுப் பேருந்து; சுற்றுலாப் பயணிகளை ஏற்றச் சென்ற நொடியில் அதிர்ச்சி

Chithra / Oct 11th 2026, 5:10 pm
image


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவருவதற்காக கொழும்பு நோக்கிப் புறப்பட்ட சொகுசுப் பேருந்துக்கு அதிகாலையில் நேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து, இன்று (11) அதிகாலை 3 மணியளவில் ஹபரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜக்கா பங்குவ பகுதியை அண்மித்த 144ஆம் கட்டைப் பகுதியில் திடீரென தீப்பற்றியுள்ளது.


சிறிது நேரத்தில் பேருந்து முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.


ஆனால், சம்பவம் இடம்பெற்றபோது பேருந்தில் சாரதியும் உதவியாளரும் மாத்திரமே இருந்துள்ளனர்.


அதிர்ஷ்டவசமாக இருவரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.


தீ விபத்தினால் பேருந்து முற்றாக எரிந்து சேதமடைந்துள்ள நிலையில், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நடுவீதியில் தீப்பிழம்பாக மாறிய சொகுசுப் பேருந்து; சுற்றுலாப் பயணிகளை ஏற்றச் சென்ற நொடியில் அதிர்ச்சி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவருவதற்காக கொழும்பு நோக்கிப் புறப்பட்ட சொகுசுப் பேருந்துக்கு அதிகாலையில் நேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து, இன்று (11) அதிகாலை 3 மணியளவில் ஹபரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜக்கா பங்குவ பகுதியை அண்மித்த 144ஆம் கட்டைப் பகுதியில் திடீரென தீப்பற்றியுள்ளது.சிறிது நேரத்தில் பேருந்து முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.ஆனால், சம்பவம் இடம்பெற்றபோது பேருந்தில் சாரதியும் உதவியாளரும் மாத்திரமே இருந்துள்ளனர்.அதிர்ஷ்டவசமாக இருவரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.தீ விபத்தினால் பேருந்து முற்றாக எரிந்து சேதமடைந்துள்ள நிலையில், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement