• May 23 2026

வான் சாரதியின் தூக்க கலக்கத்தால் கோர விபத்து; தலைகீழாக கவிழ்ந்த லொறி! ஒருவர் கவலைக்கிடம்

Chithra / Dec 31st 2025, 12:22 pm
image


இரத்தினபுரி - திருவனகெட்டிய பகுதியில் இன்று அதிகாலை வானும் ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறியும் மோதி பாரிய விபத்து சம்பவித்துள்ளது.


இவ் விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


சம்பவ இடத்தில் இருந்தவர்களின் தகவல்படி, வானைச் செலுத்தி வந்த சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


கட்டுப்பாட்டை இழந்த வான், எதிரே வந்த லொறியுடன் மோதியுள்ளது. விபத்தின் தாக்கத்தினால் ஓடுகளை ஏற்றி வந்த லொறி வீதியில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.


வானில் பயணித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


விபத்து காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது. லொறியில் இருந்த ஓடுகள் வீதியெங்கும் சிதறிக்கிடந்ததை அவதானிக்க முடிந்தது.


சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் அதிகாலை வேளையில் இந்தப் பாதையில் வாகனங்களைச் செலுத்தும்போது சாரதிகள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

வான் சாரதியின் தூக்க கலக்கத்தால் கோர விபத்து; தலைகீழாக கவிழ்ந்த லொறி ஒருவர் கவலைக்கிடம் இரத்தினபுரி - திருவனகெட்டிய பகுதியில் இன்று அதிகாலை வானும் ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறியும் மோதி பாரிய விபத்து சம்பவித்துள்ளது.இவ் விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்தவர்களின் தகவல்படி, வானைச் செலுத்தி வந்த சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.கட்டுப்பாட்டை இழந்த வான், எதிரே வந்த லொறியுடன் மோதியுள்ளது. விபத்தின் தாக்கத்தினால் ஓடுகளை ஏற்றி வந்த லொறி வீதியில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.வானில் பயணித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.விபத்து காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது. லொறியில் இருந்த ஓடுகள் வீதியெங்கும் சிதறிக்கிடந்ததை அவதானிக்க முடிந்தது.சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அதிகாலை வேளையில் இந்தப் பாதையில் வாகனங்களைச் செலுத்தும்போது சாரதிகள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement