• May 08 2025

உள்ளூராட்சி தேர்தல்: நாடு முழுவதுமான இறுதி முடிவுகள் வெளியானது!

Chithra / May 7th 2025, 1:24 pm
image

 

2025 உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தி  4,503,930 வாக்குகளைப் (43.26%) பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது.

அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, 23 மாநகர சபைகள், 26 நகர சபைகள் மற்றும் 217 பிரதேச சபைகள் உட்பட 266 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 2,258,480 வாக்குகளுடன் (21.69%) 1767 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

அந்தக் கட்சி 13 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் 02 நகர சபைகள் மற்றும் 11 பிரதேச சபைகள் அடங்கும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 954,517 வாக்குகளைப் (9.17%) பெற்று, 742 இடங்களைப் பெற்றுள்ளது.

ஆனால் எந்த உள்ளூராட்சி மன்றத்தையும் வழிநடத்தத் தவறிவிட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 488,406 வாக்குகளைப் (4.69%) பெற்று 381 இடங்களைப் பெற்றுள்ளது.

ஆனால் எந்த உள்ளூராட்சி மன்றத்தையும் வழிநடத்தத் தவறிவிட்டது.

இலஙகைத் தமிழ் அரசு கட்சி (ITAK) 307,657 வாக்குகளைப் (2.96%) பெற்று 377 இடங்களைப் பெற்றுள்ளது.

அந்தக் கட்சி 37 சபைகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் 03 மாநகர சபைகள், 01 நகர சபை மற்றும் 33 பிரதேச சபைகள் அடங்கும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 116 இடங்களைப் பெற்றுள்ளது.

02 நகர சபைகள் மற்றும் 03 பிரதேச சபைகள் உட்பட 05 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது.

அதே நேரத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி 300 இடங்களையும் சர்வஜன அதிகாரம் 226 இடங்களையும் பெற்றுள்ளது.


உள்ளூராட்சி தேர்தல்: நாடு முழுவதுமான இறுதி முடிவுகள் வெளியானது  2025 உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தி  4,503,930 வாக்குகளைப் (43.26%) பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது.அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, 23 மாநகர சபைகள், 26 நகர சபைகள் மற்றும் 217 பிரதேச சபைகள் உட்பட 266 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது.ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 2,258,480 வாக்குகளுடன் (21.69%) 1767 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.அந்தக் கட்சி 13 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் 02 நகர சபைகள் மற்றும் 11 பிரதேச சபைகள் அடங்கும்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 954,517 வாக்குகளைப் (9.17%) பெற்று, 742 இடங்களைப் பெற்றுள்ளது.ஆனால் எந்த உள்ளூராட்சி மன்றத்தையும் வழிநடத்தத் தவறிவிட்டது.ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 488,406 வாக்குகளைப் (4.69%) பெற்று 381 இடங்களைப் பெற்றுள்ளது.ஆனால் எந்த உள்ளூராட்சி மன்றத்தையும் வழிநடத்தத் தவறிவிட்டது.இலஙகைத் தமிழ் அரசு கட்சி (ITAK) 307,657 வாக்குகளைப் (2.96%) பெற்று 377 இடங்களைப் பெற்றுள்ளது.அந்தக் கட்சி 37 சபைகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் 03 மாநகர சபைகள், 01 நகர சபை மற்றும் 33 பிரதேச சபைகள் அடங்கும்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 116 இடங்களைப் பெற்றுள்ளது.02 நகர சபைகள் மற்றும் 03 பிரதேச சபைகள் உட்பட 05 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது.அதே நேரத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி 300 இடங்களையும் சர்வஜன அதிகாரம் 226 இடங்களையும் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement