நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எல்.பி. எரிவாயு விலைகளை குறைக்க லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதுடன், நாணய மாற்று விகிதம் தொடர்பான சவால்களும் காணப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 செப்டம்பர் 5ஆம் திகதியான இன்று முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருகின்றன.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 4,365 ரூபாவாகும். முன்னதாக இது 4,465 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த சிலிண்டர் 1,792 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும், 2.3 கிலோகிராம் எடையுடைய சிறிய சிலிண்டரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 815 ரூபாவாகும். முன்னைய விலை 835 ரூபாவாக காணப்பட்டது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த விலை குறைப்பு நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு விலையில் அதிரடி குறைப்பு – புதிய விலைகள் இதோ நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எல்.பி. எரிவாயு விலைகளை குறைக்க லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தீர்மானித்துள்ளது.சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதுடன், நாணய மாற்று விகிதம் தொடர்பான சவால்களும் காணப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.2026 செப்டம்பர் 5ஆம் திகதியான இன்று முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருகின்றன.இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 4,365 ரூபாவாகும். முன்னதாக இது 4,465 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.அதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த சிலிண்டர் 1,792 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.மேலும், 2.3 கிலோகிராம் எடையுடைய சிறிய சிலிண்டரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 815 ரூபாவாகும். முன்னைய விலை 835 ரூபாவாக காணப்பட்டது.தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த விலை குறைப்பு நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.