• Apr 23 2026

மின்னல் தாக்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி; தொலைபேசியில் உரையாடியபோது துயரம்

Chithra / Apr 23rd 2026, 7:24 pm
image

அநுராதபுரம் - அசரிக்கம பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரசங்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.


இத் துயர சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. 


அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும், 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும்போதே அவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.


குறித்த நபர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   


இந்நிலையில் மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின்னல் தாக்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி; தொலைபேசியில் உரையாடியபோது துயரம் அநுராதபுரம் - அசரிக்கம பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரசங்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.இத் துயர சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும், 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும்போதே அவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.குறித்த நபர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில் மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement