எதிர்பார்க்கப்படும் 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தால் இலங்கையில் கடுமையான வறட்சி ஏற்பட்டு, குடிநீர் தேவைக்காகக் கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த நிலையத்தின் மேலதிக செயலாளர் கே.ஜி.பி. தர்மதிலக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்,
இம்முறை ஏற்படவுள்ள எல் நினோ முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக இருக்கக்கூடும். இதனால் நாட்டின் பிரதான நீர் மூலங்கள் வற்றிப்போகும் அபாயம் உள்ளது.
அவசர காலங்களில் நீரை விநியோகிக்க எங்களிடம் உள்ள பவுசர்களின் எண்ணிக்கை போதாது. எனவே, கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிப்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கும்.
இதற்கு முன்கூட்டியே தயாராவது அவசியமாகும் என்றார்.
ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஏற்படும் மிகப்பலத்த எல் நினோ தாக்கம் இதுவென ஐக்கிய நாடுகளின் உலக காலநிலை முகவரகம் எச்சரித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் இந்த நிகழ்வினால், இலங்கையில் வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் கடுமையான வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மழைவீழ்ச்சி பெருமளவு குறைந்து, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எல் நினோ தாக்கம்: இலங்கையில் கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிக்கும் அபாயம் எதிர்பார்க்கப்படும் 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தால் இலங்கையில் கடுமையான வறட்சி ஏற்பட்டு, குடிநீர் தேவைக்காகக் கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.இது குறித்து அந்த நிலையத்தின் மேலதிக செயலாளர் கே.ஜி.பி. தர்மதிலக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்,இம்முறை ஏற்படவுள்ள எல் நினோ முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக இருக்கக்கூடும். இதனால் நாட்டின் பிரதான நீர் மூலங்கள் வற்றிப்போகும் அபாயம் உள்ளது. அவசர காலங்களில் நீரை விநியோகிக்க எங்களிடம் உள்ள பவுசர்களின் எண்ணிக்கை போதாது. எனவே, கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிப்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு முன்கூட்டியே தயாராவது அவசியமாகும் என்றார்.ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஏற்படும் மிகப்பலத்த எல் நினோ தாக்கம் இதுவென ஐக்கிய நாடுகளின் உலக காலநிலை முகவரகம் எச்சரித்துள்ளது.பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் இந்த நிகழ்வினால், இலங்கையில் வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் கடுமையான வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மழைவீழ்ச்சி பெருமளவு குறைந்து, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.