• Sep 01 2025

கிளி.வைத்தியசாலை நலன்புரிச் சங்கம் மக்களை அழைத்து போராட்டம்; இளங்குமரன் எம்.பி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

shanuja / Aug 30th 2025, 8:20 pm
image

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளி நலன்புரிச்சங்கம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை அழைத்து போராட்டம் மேற்கொண்டுள்ளது. 


இது  அரசுக்கெதிரான நடவடிக்கை. ஆகவே இதற்கு  விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி  பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாட்டை பதிவு செய்தார்.


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள பெண்நோய்யியல் பிரிவு வைத்திய உபகரணங்களை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்ல முற்படுவதாக நோயாளி நலன்புரிச்சங்கம் துண்டுப்பிரசுரம் மூலம்  தெரிவித்து நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


குறித்த விடயம் பொய்யான விடயம் அரசுக்கெதிரானது என தெரிவித்தே குறித்த முறைப்பாட்டை பதிவு செய்தார்.

கிளி.வைத்தியசாலை நலன்புரிச் சங்கம் மக்களை அழைத்து போராட்டம்; இளங்குமரன் எம்.பி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளி நலன்புரிச்சங்கம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை அழைத்து போராட்டம் மேற்கொண்டுள்ளது. இது  அரசுக்கெதிரான நடவடிக்கை. ஆகவே இதற்கு  விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி  பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாட்டை பதிவு செய்தார்.கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள பெண்நோய்யியல் பிரிவு வைத்திய உபகரணங்களை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்ல முற்படுவதாக நோயாளி நலன்புரிச்சங்கம் துண்டுப்பிரசுரம் மூலம்  தெரிவித்து நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.குறித்த விடயம் பொய்யான விடயம் அரசுக்கெதிரானது என தெரிவித்தே குறித்த முறைப்பாட்டை பதிவு செய்தார்.

Advertisement

Advertisement

Advertisement