• May 12 2025

காஷ்மீர் தொடர்பாக முக்கிய முடிவு இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அதிரடி காட்டும் ட்ரம்ப்

Thansita / May 11th 2025, 10:00 pm
image

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றமான போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமையும் நீடித்து வருகிறது.

இந்த இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு நாட்களாக நடந்த கடுமையான மோதல்களுக்கு பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண உதவுவதாக உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகள் மற்றும் அழுத்தத்தின் காரணமாக மே 10 அதாவது சனிக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், அதற்கு சில மணி நேரங்களில் இந்திய காஷ்மீரில் பீரங்கித் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு நகரங்களில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், வான்வழித் தற்காப்பு அமைப்புகளின் ஒலிகள் எதிரொலித்ததாகவும் செய்திகள் வெளியாகின. 

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டியதுடன், இந்தியப் படைகளுக்கு மீண்டும் இதுபோன்ற மீறல்களை கடுமையாக எதிர்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான், தாங்கள் போர் நிறுத்தத்திற்கு உறுதியாக இருப்பதாகவும், இந்தியாவே மீறல்களுக்கு காரணம் என்றும் கூறியது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், எல்லைப் பகுதிகளில் இரவு முழுவதும் நடந்த வெடிப்புகள் மற்றும் மோதல்கள் ஓய்ந்தன. இந்திய எல்லைப் பகுதிகளில் மின்சாரம் மீட்டமைக்கப்பட்டது. 

 இதையடுத்து, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், இரு நாடுகளின் தலைவர்களையும் பாராட்டியதுடன்,  இந்த இரு சிறந்த நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்க உள்ளேன். மேலும், காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வு காண முடியுமா என இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவேன்," என்று கூறினார்.

காஷ்மீர் தொடர்பாக முக்கிய முடிவு இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அதிரடி காட்டும் ட்ரம்ப் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றமான போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமையும் நீடித்து வருகிறது. இந்த இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு நாட்களாக நடந்த கடுமையான மோதல்களுக்கு பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண உதவுவதாக உறுதியளித்துள்ளார்.அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகள் மற்றும் அழுத்தத்தின் காரணமாக மே 10 அதாவது சனிக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், அதற்கு சில மணி நேரங்களில் இந்திய காஷ்மீரில் பீரங்கித் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு நகரங்களில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், வான்வழித் தற்காப்பு அமைப்புகளின் ஒலிகள் எதிரொலித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டியதுடன், இந்தியப் படைகளுக்கு மீண்டும் இதுபோன்ற மீறல்களை கடுமையாக எதிர்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பாகிஸ்தான், தாங்கள் போர் நிறுத்தத்திற்கு உறுதியாக இருப்பதாகவும், இந்தியாவே மீறல்களுக்கு காரணம் என்றும் கூறியது.ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், எல்லைப் பகுதிகளில் இரவு முழுவதும் நடந்த வெடிப்புகள் மற்றும் மோதல்கள் ஓய்ந்தன. இந்திய எல்லைப் பகுதிகளில் மின்சாரம் மீட்டமைக்கப்பட்டது.  இதையடுத்து, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், இரு நாடுகளின் தலைவர்களையும் பாராட்டியதுடன்,  இந்த இரு சிறந்த நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்க உள்ளேன். மேலும், காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வு காண முடியுமா என இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவேன்," என்று கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement