• Sep 13 2025

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு அறிக்கை; திருகோணமலையில் இன்று வெளியீடு!

shanuja / Sep 12th 2025, 8:05 pm
image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை இன்று (12) திருகோணமலையில் வெளியிடப்பட்டது. 


வடகிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை வெளிக் கடை தியாகிகள் திறந்த வெளி அரங்குக்கு முன்னால்  வெளியிடப்பட்டது.


இதனை தொடர்ந்து உணர்வு பூர்வமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு நினைவு கூரப்பட்டு ஊடகப் படுகொலை தொடர்பாகவும்  நிமலராஜனின் படுகொலை தொடர்பாகவும் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.


இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன்  வழக்கு தொடர்பிலான அறிக்கை அடங்கிய புத்தகம்  வழங்கப்பட்டது. 


இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிப்பொறி முறை ஊடாக நீதியை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றாகவே ஊடகவியலாளர்களின் கொலை கருதப்படுகிறது எனவும் இதில் கலந்து கொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 


இதில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு அறிக்கை; திருகோணமலையில் இன்று வெளியீடு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை இன்று (12) திருகோணமலையில் வெளியிடப்பட்டது. வடகிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை வெளிக் கடை தியாகிகள் திறந்த வெளி அரங்குக்கு முன்னால்  வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து உணர்வு பூர்வமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு நினைவு கூரப்பட்டு ஊடகப் படுகொலை தொடர்பாகவும்  நிமலராஜனின் படுகொலை தொடர்பாகவும் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன்  வழக்கு தொடர்பிலான அறிக்கை அடங்கிய புத்தகம்  வழங்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிப்பொறி முறை ஊடாக நீதியை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றாகவே ஊடகவியலாளர்களின் கொலை கருதப்படுகிறது எனவும் இதில் கலந்து கொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement