யாழில் நேற்று நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று திடீரென யாழ்ப்பாணத்தின் கனமழை பெய்தது. கனமழையுடன் பலத்த காற்றும் யாழை சுழற்றியடித்தது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்ததுடன் இடிமின்னலும் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பலத்த காற்றுடனான கனமழையால் யாழின் பல பகுதிகளில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் யாழ்.நவக்கிரிப் பகுதியில் மின்னல் தாக்கியதில் தானையா புவனேஸ்வரன் என்பவருடைய தோட்டத்தில் உள்ள மோட்டர் அறை, மோட்டர், மின்சார இணைப்பு என்பன முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவருடைய 52 வாழை மரங்களும் அடியோடு அழிவடைந்துள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வாழை மரங்கள் அடியோடு அழிவடைந்ததில் குறித்த நபரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் நிலவிய அசாதாரண காலநிலை; அடியோடு அழிந்த 52 வாழை மரங்கள் யாழில் நேற்று நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.நேற்று திடீரென யாழ்ப்பாணத்தின் கனமழை பெய்தது. கனமழையுடன் பலத்த காற்றும் யாழை சுழற்றியடித்தது.பலத்த காற்றுடன் கனமழை பெய்ததுடன் இடிமின்னலும் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பலத்த காற்றுடனான கனமழையால் யாழின் பல பகுதிகளில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் யாழ்.நவக்கிரிப் பகுதியில் மின்னல் தாக்கியதில் தானையா புவனேஸ்வரன் என்பவருடைய தோட்டத்தில் உள்ள மோட்டர் அறை, மோட்டர், மின்சார இணைப்பு என்பன முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவருடைய 52 வாழை மரங்களும் அடியோடு அழிவடைந்துள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வாழை மரங்கள் அடியோடு அழிவடைந்ததில் குறித்த நபரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.