• Apr 20 2026

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய மாணவன்..!

Ziya / Jun 7th 2025, 9:21 pm
image

ஆசிரியர் தண்டித்ததால் பாடசாலை மாணவர் ஒருவர் கிருமி நாசினியை அருந்திய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன், தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் குறித்த மாணவனை தண்டித்துள்ளார். 

அதன்பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அதேவேளை, குறித்த ஆசிரியர் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவனுக்கு தடியால் தாக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் என அறியவருகிறது.

குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது,  தான் விடுமுறையில் நிற்பதாகவும் பாடசாலை ஆசிரியர் மாணவனைப் பேசியதாகவும் பின்னர் வீடு சென்ற மாணவன் மருந்து அருந்தியதாக அறிந்ததாக தெரிவித்தார்.

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய மாணவன். ஆசிரியர் தண்டித்ததால் பாடசாலை மாணவர் ஒருவர் கிருமி நாசினியை அருந்திய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன், தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் குறித்த மாணவனை தண்டித்துள்ளார். அதன்பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதேவேளை, குறித்த ஆசிரியர் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவனுக்கு தடியால் தாக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் என அறியவருகிறது.குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது,  தான் விடுமுறையில் நிற்பதாகவும் பாடசாலை ஆசிரியர் மாணவனைப் பேசியதாகவும் பின்னர் வீடு சென்ற மாணவன் மருந்து அருந்தியதாக அறிந்ததாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement