• Apr 16 2026

காலக்குரல் வெற்றியாளரான யாழ். மாணவி தன்சிகா - உடுத்துறையில் கெளரவிப்பு

Chithra / Apr 15th 2026, 8:38 pm
image

கிளிநொச்சியில் இடம்பெற்ற காலக்குரல் பாடல் போட்டியில் முதலாவது இடத்தை பெற்ற யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்த மாணவி ஜெ.தன்சிகாவிற்கான  பாராட்டு விழா இன்று உடுத்துறை பாரதி விளையாட்டு கழக பொதுமண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.


நிகழ்வில்  பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சிறப்பு  விருந்தினர்களாக கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார்,  கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து  கொண்டனர்.


முதலாம் இடத்தை பெற்ற பாடகி மாணவி தன்சிகா கௌரவிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர், கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவர் மற்றும், அருட்தந்தை.வசந்தன் அடிகளார் ஆகியோர் இணைந்து மாணவிக்கு நிதி அன்பளிப்பையும் வழங்கியிருந்தனர்.


கௌரவிப்பு நிகழ்வில் மாணவியின் பெற்றோர்,  விளையாட்டுக்கழக உறுப்பினர்கள்,  பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


காலக்குரல் வெற்றியாளரான யாழ். மாணவி தன்சிகா - உடுத்துறையில் கெளரவிப்பு கிளிநொச்சியில் இடம்பெற்ற காலக்குரல் பாடல் போட்டியில் முதலாவது இடத்தை பெற்ற யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்த மாணவி ஜெ.தன்சிகாவிற்கான  பாராட்டு விழா இன்று உடுத்துறை பாரதி விளையாட்டு கழக பொதுமண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.நிகழ்வில்  பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சிறப்பு  விருந்தினர்களாக கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார்,  கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து  கொண்டனர்.முதலாம் இடத்தை பெற்ற பாடகி மாணவி தன்சிகா கௌரவிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர், கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவர் மற்றும், அருட்தந்தை.வசந்தன் அடிகளார் ஆகியோர் இணைந்து மாணவிக்கு நிதி அன்பளிப்பையும் வழங்கியிருந்தனர்.கௌரவிப்பு நிகழ்வில் மாணவியின் பெற்றோர்,  விளையாட்டுக்கழக உறுப்பினர்கள்,  பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement