அன்னை பூபதியின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி இன்று மாலை வவுனியாவை வந்தடைந்திருந்தது.
வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபி முன்பாக பிரதான அஞ்சலி நிகழ்வு தீபம் ஏற்றி மலர் தூபி இடம்பெற்றது.
தொடர்ந்தும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற குறித்த அன்னை பூபதியின் திருவுருவ படம் தாங்கிய ஊர்திக்கு மக்கள் திரண்டு வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஊர்திப் பவனியானது வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் முழுவதும் ஊர்வலமாக சென்று, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திக்கு வவுனியா மக்கள் அஞ்சலி அன்னை பூபதியின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி இன்று மாலை வவுனியாவை வந்தடைந்திருந்தது.வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபி முன்பாக பிரதான அஞ்சலி நிகழ்வு தீபம் ஏற்றி மலர் தூபி இடம்பெற்றது.தொடர்ந்தும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற குறித்த அன்னை பூபதியின் திருவுருவ படம் தாங்கிய ஊர்திக்கு மக்கள் திரண்டு வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஊர்திப் பவனியானது வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் முழுவதும் ஊர்வலமாக சென்று, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.எதிர்வரும் 19 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.