• Apr 16 2026

பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரத்தில் சிக்கல்? மானிப்பாய் பிரதேச சபையின் தீர்மானம்

Chithra / Feb 20th 2026, 7:31 pm
image

 

பாடசாலை மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக சிகையலங்காரம் செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.ஜசீதன் தெரிவித்துள்ளார்.


வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். 


அவர் மேலும் தெரிவிக்கையில்,


சிகையலங்கார பிரச்சினையால் பல பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களை திருப்பி அனுப்புகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. ஆகவே சாதாரணமானவர்களுக்கு சிகையலங்காரம் செய்கின்றது போல பாடசாலை மாணவர்களுக்கு சிகையலங்காரம் செய்ய கூடாது.


ஆகவே எமது பிரதேசத்தில் இருக்கின்ற சிகையலங்கார சங்கத்துடன் நாங்கள் இதுபற்றி பேசுவோம். அவர்கள் நிச்சயமாக இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். ஏனெனில் அவர்களும் அதைத்தான் விரும்புகின்றார்கள். ஆகவே இந்த தீர்மானத்தின் மூலம் நாங்கள் அதனை இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்துவோம் என்றார்.

பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரத்தில் சிக்கல் மானிப்பாய் பிரதேச சபையின் தீர்மானம்  பாடசாலை மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக சிகையலங்காரம் செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.ஜசீதன் தெரிவித்துள்ளார்.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,சிகையலங்கார பிரச்சினையால் பல பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களை திருப்பி அனுப்புகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. ஆகவே சாதாரணமானவர்களுக்கு சிகையலங்காரம் செய்கின்றது போல பாடசாலை மாணவர்களுக்கு சிகையலங்காரம் செய்ய கூடாது.ஆகவே எமது பிரதேசத்தில் இருக்கின்ற சிகையலங்கார சங்கத்துடன் நாங்கள் இதுபற்றி பேசுவோம். அவர்கள் நிச்சயமாக இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். ஏனெனில் அவர்களும் அதைத்தான் விரும்புகின்றார்கள். ஆகவே இந்த தீர்மானத்தின் மூலம் நாங்கள் அதனை இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்துவோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement